இக் கடுமையான நாட்களில்,
காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருக்கும் பலர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகின்றனர். இப்படியான தருணங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று குடும்ப மருத்துவர்களின் இத்தாலியக் கூட்டமைப்பின் (Federazione Italiana di Medici di Famiglia) உப தலைவர் Ovidio Brignoli விளக்குகிறார். வீட்டு சிகிச்சைக்கான விதிமுறைகள் மற்றும் மருத்துவ ரீதியான குணப்படுத்தலை எவ்வாறு தீர்மானிப்பது என்பது கீழே தரப்படுகின்றது.
வீட்டுக்குள் இருக்கும் போது காய்ச்சல் வந்தால் என்ன செய்வது?
37.5க்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக தொலைபேசி ஊடாக குடும்ப மருத்துவரை தொடர்புக கொள்ளவேண்டும். இவர், நோயின் அறிகுறிகளை அறிவதற்கு, சில கேள்விகள் கேட்பார். சொந்தக் குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொள்வது முக்கியம் ஆகும். ஏனென்றால் நோயாளியின் மருத்துவ வரலாற்றை நன்றாகத் தெரிந்து, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு கொரோனாவைரசு நோய்த்தொற்று எவ்வாறு கடினமாகும் என்பதை இவரால் தான் கூற முடியும்.
எச்சரிக்க வேண்டிய அறிகுறிகள் யாவை?
காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் சுவாசக் கடினங்கள் கூடுதலான மூன்று முக்கிய அறிகுறிகள் ஆகும். காய்ச்சல் நிறைய உயரக்கூடும், மருந்துகள் எடுத்தும் குறையாமல் இருப்பது அவதானிக்கப்பட வேண்டிய விடயம். உடல் வெப்பநிலையின் அதிகரிப்பு மிகவும் கூடிய அறிகுறியாகும். மேலும் குறைந்தளவில் பொதுவாக காணப்படும் அறிகுறிகள்: மூச்சுத் திணறல், சுவாசம் மற்றும் பேசுவதில் சிரமம், சோர்வு, கூடியளவில் சளி, தொண்டை வலி, தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குளிர் நடுக்கம், குமட்டல் மற்றும் வாந்தி, மூக்கு நெரிசல், வயிற்றுப்போக்கு, விழிவெண்படல அழற்சி.
எனது அறிகுறிகள் கோவிட் 19 சார்ந்தது என்று மருத்துவர் மதிப்பிட்டால் என்ன செய்வது?
வீட்டை விட்டு வெளியேறாமல், நோயாளி 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்படும் மருந்துகள் யாவை?
உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்கீழ் சிகிச்சை மேற்க்கொள்ள வேண்டும், இருப்பினும், பொதுவாக Paracetamol 1 கிராம் ஒரு நாளைக்கு 3 தடவை எடுக்கலாம், இது காய்ச்சலைக் குறைப்பதோடு கூடுதலாக வலி நிவாரணியாகும். தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். குடல் கோளாறுகளுக்கு, வழமையான வயிற்றுப்போக்கு மருந்துகளைப் பயன்படுத்தலாம். காய்ச்சல் பொதுவாக 5-7 நாட்களில் முடிந்து விடும். 1-2 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் திரும்பி வருவதற்க்கான சாத்தியம் இருக்கிறது. பலவீனத் தன்மை நீங்க சில நாட்கள் செல்லும்.
எனது நோயை யார் கண்காணிப்பார்?
தொலைபேசி ஊடாக குடும்ப மருத்துவர் உங்கள் நோயை கண்காணித்து வருவார். தினசரி மூன்று அளவுருக்களை நோயாளி கண்காணிக்க வேண்டும்: சுவாசத்தின் அதிர்வெண் (Frequenza del respiro – ஒரு நிமிடத்தில் சுவாச செயல்பாடுகள் 20 வரை இருந்தால் இயல்பானதாகும்); இதய துடிப்பு (Frequenza arteriosa – அளவெடுக்கும் கருவி மருந்தகத்தில் வாங்க வேண்டும்); oxygen செறிவு (Saturazione di ossigeno – பிரச்சினைகளை இனம் காணுவதற்கு அதிமுக்கிய ஒரு காரணி).
எனது நிலைமை கடுமையாகினால் என்ன செய்வது?
கண்காணித்து வரும் அளவுருக்கள் அதிகரித்தால், குடும்ப மருத்துவரே 112 இலக்கத்திற்கு அழைத்து உங்களை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான வழிகளை மேற்கொள்வார். மருத்துவ குழு ஒன்று வீட்டிற்கு வந்து, நோயாளியை பரிசோதித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை பற்றி முடிவெடுப்பார்கள்.
குடும்பத்தினருடன் வாழ்வது எப்படி?
நோய்வாய்ப்பட்டவர்கள் முக உறை (mask) மற்றும் கையுறைகளை அணிந்து ஒரு அறையில் தனியே தங்க வேண்டும். நோயாளியை வீட்டில் பராமரிப்பவர்களும் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். நோயாளி தனியாகச் சாப்பிட வேண்டும். முடிந்தால், தனிப்பட்ட குளியலறையைப் பயன்படுத்த வேண்டும். நோயாளி பயன்படுத்தும் குளியலறை மற்றும் அறையை Cloro அல்லது 70% alcol கொண்ட மருந்துகளுடன் சுத்தப்படுத்த வேண்டும். பாவித்த உடைகள், துவாய்கள் அனைத்தும் சலவை இயந்திரத்தில் 60-90 டிகிரியில் கழுவ வேண்டும்.
Covid-19 நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தெரிவிக்கப்படுகின்றார்களா?
இக் கால கட்டத்தில் காய்ச்சல், இருமல், சுவாசிப்பதற்கு கடினம் உள்ளவர்கள் கூடுதலாக கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆகையால், MAINF எனும் கண்காணிப்பு அமைப்புக்கு உடனடியாக மருத்துவர்கள் அறிவித்து விடுவார்கள்.
வைரசை இனம் காணும் பரிசோதனையை மேற்கொள்ளவில்லை என்றால் நான் குணமாகி விட்டதை எப்படி உறுதிப்படுத்துவது?
14 நாட்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லையென்றால் நோயில் இருந்து குணமாகி விட்டதாகக் கூடுதலாக உறுதியாகின்றது. இன்னும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்தால் நல்லது. இரண்டு தடவை பரிசோதிக்கப்பட்ட பின்பு தான் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவ அறிக்கை வழங்கப்படும்.
Covid-19 நோயால் பாதிக்கபட்டவருடன் நெருங்கிய தொடர்பு இருந்திருந்தால் என்ன செய்வது?
உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டும் (Quarantena). 14 நாட்களுக்குப் பின் எவ்வித அறிகுறிகளும் இல்லையென்றால், பாதுகாப்பு நெறிமுறைகளை மதித்து, வெளியே செல்ல முடியும்.
நன்றி தமிழ் தகவல் மையம்