காரைதீவில் கடலில் வீழ்ந்து மற்றுமொரு வைத்தியர் பலி !

You are currently viewing காரைதீவில் கடலில் வீழ்ந்து மற்றுமொரு வைத்தியர் பலி !

அம்பாறை (Ampara) – காரைதீவில் வைத்தியர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்று (15) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து வருகின்ற வழியில் பாணமை கடலில் தவறி வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில், அம்பாறை, காரைதீவைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்தியர் இ.தக்சிதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இருந்து இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (20) என்பவர் நேற்றுமுன்தினம் லகுகல கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments