“நாங்கள் அந்த பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவேளை படையினருடன் காணப்பட்ட நபர் ஒருவர் – சிவில் உடையில்,எனது சகாவை பார்த்து சத்தமிட்டு அவரின் கையடக்க தொலைபேசியிலிருந்த வீடியோக்களை அழிக்கவேண்டும் என தெரிவித்தார்.ஒரிரு செகன்ட்களில் அவர் எனது நண்பரை தாக்கி அவரின் கையடக்க தொலைபேசியை பறித்தார்.
நாங்கள் செய்தியாளர்கள் எங்கள் கடமையை செய்கின்றோம் என நாங்கள் தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் அதனை செவிமடுக்க தயாரில்லை.எனது சகாவை மேலும் தாக்கினார்கள் நாங்கள் இதற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்தோம்.
படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளலாம் என அறிந்ததும், இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னால் உள்ள அந்த பகுதிக்கு நாங்கள் சென்றோம்.
சில நிமிடங்களில் ஆயுதங்களேந்திய நூற்றுக்கணக்கான படையினரும் பொலிஸ் கொமான்டோக்களும் கலகம் அடக்குவதற்கான சாதனங்களுடன் இரண்டு திசைகளில் இருந்து வந்திறங்கினர் அவர்களின் முகங்கள் மூடப்பட்டிருந்தன.
அவர்கள் அங்கு காணப்படுவதற்குசெயற்பாட்டாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தவேளை பாதுகாப்பு படையினர் முன்னோக்கி நகர்ந்தனர் மூர்க்கத்தனமானவர்களாக மாறினர்.
ஒரிரு செகன்ட்களிற்குள் நாங்கள் படையினர் சத்தமிட்டவாறு கூடாரங்களை அகற்றுவதையும் தற்காலிக கூடாரங்களையும் அப்பகுதியில்நடைபாதையில் காணப்பட்ட ஏனைய பொருட்களை அழிப்பதையும் பார்த்தோம். கடந்த வாரம் பெருமளவு மக்கள் முற்றுகையிட்டு உள்ளே நுழைந்த அலுவலகத்திற்குள்ளும் பெருமளவு படையினர் நுழைந்தனர்.
செயற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை மதியம் அந்த கட்டிடடத்தை ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர். நாங்கள் படையினருக்கு சென்றவேளை அவர்கள் அனைத்தையும் அகற்றுவதை பார்த்தோம்.
ஆர்ப்பாட்டக்காரர்களை ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் தள்ளிய படையினர் அவர்கள் நுழைவதை தடுப்பதற்காக தடுப்புகளை அமைத்தனர்.
நாங்கள் அந்த பகுதியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தவேளை படையினருடன் காணப்பட்ட நபர் ஒருவர் – சிவில் உடையில்,எனது சகாவை பார்த்து சத்தமிட்டு அவரின் கையடக்க தொலைபேசியிலிருந்த வீடியோக்களை அழிக்கவேண்டும் என தெரிவித்தார்.ஒரிரு செகன்ட்களில் அவர் எனது நண்பரை தாக்கி அவரின் கையடக்க தொலைபேசியை பறித்தார்.
நாங்கள் செய்தியாளர்கள் எங்கள் கடமையை செய்கின்றோம் என நாங்கள் தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் அதனை செவிமடுக்க தயாரில்லை.எனது சகாவை மேலும் தாக்கினார்கள் நாங்கள் இதற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்தோம்.
இன்னொரு பிபிசி செய்தியாளரின் மைக்கை பறித்து எறிந்தார்கள் படங்களை அகற்றிய பின்னர் கையடக்க தொலைபேசியை திருப்பிதந்தனர்,இராணுவ அதிகாரியொருவர் தலையிட்டு நாங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கினார்.
எனது சகா அதிர்ச்சியடைந்திருந்தார் ஆனால் அருகில் உள்ள எங்கள் ஹோட்டலிற்கு சென்றோம்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாங்கள் பொலிஸார் இராணுவத்தினரிடமிருந்துபதிலை பெற முயன்றோம் ஆனால் எவரும் எங்கள் தொலைபேசி அழைப்புகளிற்கு பதிலளிக்கவில்லை – கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அவசரகால சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது.