அமெரிக்காவில் நடைபெறும் சிறுபான்மையினரின் உரிமைப்போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அமெரிக்க காவல்துறை, சிறுபான்மையினர்மீது மேற்கொண்டுவரும் பலாத்காரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நோர்வேயின் பல பாகங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, தலைநகர் “Oslo” வில் இன்று நடைபெற்ற போராட்டங்களுக்கு முன்னதாக அரசும், காவல்துறையும், “கொரோனா” சட்டங்களை காரணம் காட்டி தடைவிதித்திருந்ததோடு, 50 பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இன்றையதினம் தலைநகரின் ஒதுக்குப்புறமாகவுள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் கூடிய மக்கள், பின்னதாக நகர மத்தியில் இருக்கும் நாடாளுமன்றம் முன்னால் ஆயிரக்கணக்கில் கூடியதாக தெரிவிக்கப்படுகிறது. அரசும், காவல்துறையும் விதித்திருந்த தடைகளையும் மீறி மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியதால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட காவல்துறை, “கொரோனா” சட்டதிட்டங்களை கைவிட்டுவிட்டு, அங்கு சம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் அமைதியாக தொடங்கிய போராட்டங்களில் சிறுசிறு சலசலப்புகளை காணக்கூடியதாக இருந்ததாகவும், எனினும், போராட்டங்களை ஒழுங்கமைத்தவர்கள் சலசலப்புக்களை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வே நாடாளுமன்றத்தின் கூடிய மக்கள், அமெரிக்க காவல்துறையால் கொல்லப்பட்ட “George Floyd” இற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நேரமான 8 நிமிடங்களும், 46 வினாடிகளுக்கு அமைதியாக நின்றதாகவும், பின்னதாக “George Floyd” இறுதியாக பேசிய வார்த்தைகளை உரக்க சொன்னதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போராட்டங்களில் கலந்துகொண்ட மக்கள்,
«Black lives matter»
«don’t sit back and be silent»
«we want justice»
«we can’t breathe»
போன்ற வாசங்கங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்ததாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளி இணைப்பு: