ஹமாஸ் சுரங்கப்பாதையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பணயக் கைதிகளை விடுப்பதற்காக, அவர்களது தோழர்கள் காஸாவின் பாராளுமன்ற கட்டிடத்தில் துப்பாக்கியுடன் நின்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
காஸாவின் பாராளுமன்ற கட்டிடத்தை நேற்று இரவு இஸ்ரேல் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
பாலஸ்தீன சட்டசபை கட்டிடத்தில் உள்ள அறை ஒன்றில், துப்பாக்கிகள் மற்றும் கொடிகளுடன் இஸ்ரேலிய துருப்புகள் நிற்கும் புகைப்படம் வெளியாகி அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஆனால், இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மை இன்னும் நிறுவப்படவில்லை என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
நேற்று இரவு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, ஹமாஸ் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்றும், IDF ஒவ்வொரு புள்ளியிலும் முன்னேறி வருகிறது என்றும் கூறினார்.
அதேபோல் இஸ்ரேலிய துருப்புக்கள் சுற்றி வளைத்துள்ள காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையின் நியோ-நேட்டல் பிரிவில் இப்போது ஏழு குழந்தைகள் இறந்துவிட்டதாக நேற்று கூறப்பட்டது.