காஸா தொடர்பில் மெளனம் காக்க முடியாது: கமலா ஹாரிஸ் வெளிப்படை!

You are currently viewing காஸா தொடர்பில் மெளனம் காக்க முடியாது: கமலா ஹாரிஸ் வெளிப்படை!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வாஷிங்டனில் சந்தித்த பின்னர், காஸா தொடர்பில் தாம் மெளனம் காக்க முடியாது என துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வெளிப்படையாக கூறியுள்ளார். காஸா மக்கள் தொடர்பில் அவர்களின் மனிதாபிமான சூழ்நிலை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக கமலா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் வெல்வார் என்றால் இஸ்ரேல் விவகாரத்தை அவர் எவ்வாறு அணுகுவார் என உலகமே உற்றுநோக்கும் நிலையில், ஹாரிஸ் காஸா தொடர்பில் வெளிப்படையாக தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இஸ்ரேலுக்கு தங்களை பாதுகாக்கும் பொறுப்பும் உரிமையும் உள்ளது. அதை அவர்கள் எவ்வாறு முன்னெடுக்கிறார்கள் என்பது முக்கியம். காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில், தமது கவலையை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கமலா ஹாரிஸ், கண்டிப்பாக இந்த விவகாரத்தில் தாம் மெளனமாக இருக்க முடியாது என்றார்.

இஸ்ரேல் விவகாரத்தில் கமலா ஹாரிஸின் தீர்க்கமான கருத்தாழமிக்க பேச்சு கவனிக்கப்படுவதுடன், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் முன்னெடுத்த நடவடிக்கைகள் அல்ல, கமலா ஹாரிஸ் ஜனாதிபதியானால் முன்னெடுக்க இருப்பது என்பதன் அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமருடனான சந்திப்பில் உடனடி போர் நிறுத்தம் அவரசியம் என்பதை ஜோ பைடன் அழுத்தமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே கருத்தையே டொனால்டு ட்ரம்பும் நெதன்யாகு உடனான சந்திப்பின் போது முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments