இஸ்ரேலின் 19 மாத கால இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதோடு காஸாவில் தனது தாக்குதலை நிறுத்தி மேலும் 10 பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
அமெரிக்க மத்தியஸ்தர்கள் இந்த திட்டத்தை இரவோடு இரவாக முன்வைத்ததாக இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதில் ஐந்து உயிருள்ள பணயக்கைதிகள் மற்றும் ஐந்து இறந்த கைதிகளை விடுவித்தல் காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குதல், 70 நாள் போர் நிறுத்தம் மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஆகியவை அடங்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.
ஹமாஸிடம் சரணடைதல் என்று வர்ணித்து இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்ததாக அந்த அதிகாரி கூறினார்.
மார்ச் மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைத்த ஒப்பந்த முன்மொழிவான விட்காஃப் கட்டமைப்பை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது,
இது 50 நாள் போர் நிறுத்தத்திற்கு ஈடாக கூடுதல் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், நீண்ட போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக உறுதியளிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை
பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 58 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் ஆயுதக்குழுவினர், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேபோன்று
அகதிகள் முகாமாக செயல்படும் காஸா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
காஸா மக்களின் தங்குமிடங்களாக உள்ள பள்ளிகளை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதுவரை காஸாவில் உள்ள 95 சதவீத பள்ளிகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது.