கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் மரணம்!

You are currently viewing கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் மரணம்!

மட்டக்களப்பில் கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06.08.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

அருணாசலம் சிவரூபன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் தாயாருடன் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply