கிளிநொச்சி – பளை கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கிளாலி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய மரியான் பீரிஸ் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் பளை சிறீலங்கா காவற்துறையினர் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிளாலியில் குளத்தில் நீராடியவர் சடலமாக மீட்பு!
