கிளிநொச்சியில் அதிகரிக்கும் கால்நடை திருட்டு!

You are currently viewing கிளிநொச்சியில் அதிகரிக்கும் கால்நடை திருட்டு!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது பல பகுதிகளில் கால்நடை திருட்டு அதிகரித்து வருகின்றது.

இது தொடர்பாக கால்நடை உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கிளிநொச்சி குளம் உருத்திரபுரம் பகுதியில் நேற்றைய தினம்(24) இரவு வீட்டு பட்டியில் கட்டி வைத்த கன்று ஈனும் நிலையிலுள்ள பசுவை கொன்று இறைச்சியாக்கி கொண்டு சென்றுள்ளனர்.

கன்று ஈனுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான கால்நடையை அதன் வயிற்றில் இருந்த கன்றினை வெளியில் எடுத்து வீசிவிட்டு இறைச்சிக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply