கிளிநொச்சியில் இன்று (06.04.2020) திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்யத் திரண்டிருந்ததைக் காணமுடிந்து.
இந்நிலமை கொரோனா தொற்றிற்கு மேலும் வழிகோலும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது வீட்டில் இருக்கும் முதியவர்கள், குழந்தைகளையும் பாதிக்கும் எனவும் அவதானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.


