கிளிநொச்சியில் இன்று காலை கோர விபத்து! ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!

You are currently viewing கிளிநொச்சியில் இன்று காலை கோர விபத்து!  ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!

கிளிநொச்சி A9 வீதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்திப் பயணித்துள்ளது.

அதே திசையில் பயணித்த பார ஊர்தி குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார். குறித்த பார ஊர்தியின் சாரதி கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை    சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments