கிளிநொச்சியில் உணவின்மை பிரச்சினையை எதிர்கொள்ளும் 7 ஆயிரம் குடும்பங்கள்!

You are currently viewing கிளிநொச்சியில் உணவின்மை பிரச்சினையை எதிர்கொள்ளும் 7 ஆயிரம் குடும்பங்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 313 குடும்பங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டு, உணவின்மை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவையாக காணப்படுகின்றன. இந்நிலையில் குறித்த மாவட்டத்தில் 7,313 குடும்பங்கள் உணவு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

குறிப்பாக, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 4,050 குடும்பங்களும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 1,546 குடும்பங்களும், பூனகரி பிரதேச செயலாளர் பிரிவில் 390 குடும்பங்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 1,327 குடும்பங்களும் உணவு நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கரைச்சியில் 5 வயதுக்குட்பட்ட 54 சிறுவர்களும், 5 முதல் 16 வயது வரையான 1,234 சிறுவர்களும், கண்டாவளையில் 5 வயதுக்குட்பட்ட 180 சிறுவர்களும், 5 முதல் 16 வயது வரையான 704 சிறுவர்களும், பூனகரியில் 5 வயதுக்குட்பட்ட 261 சிறுவர்களும், 5 முதல் 16 வயது வரையான 507 சிறுவர்களும், பச்சிலைப்பள்ளியில் 5 வயதுக்குட்பட்ட 73 சிறுவர்களும், 5 முதல் 16 வயது வரையான 320 சிறுவர்களும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேற்படி நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 318 வரையான கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply