கிளிநொச்சி – தர்மபுரம் சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தயார் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 35 வதுடைய தாயாரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொலை என சந்தேகித்த சிறீலங்கா காவற்துறையினர், அவருடைய 14 வயது மகனை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் சடலத்தை பார்வையிட்டார்.
மேலும் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.