கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரி கடத்தப்பட்டு கொள்ளை!

You are currently viewing கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரி கடத்தப்பட்டு கொள்ளை!

கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரி ஒருவர் வேலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதுடன், கடையை திறக்க வைத்து 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் குறித்த நபர், வியாபார நடவடிக்கைகளை முடித்து நேற்று இரவு வீடு சென்றுகொண்டிருந்த போது பன்னங்கண்டி பகுதியில் வைத்து வானில் வந்தவர்களால் வழிமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு நீண்ட நேரம் வானில் வைத்து தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடைக்கு அழைத்து சென்று கடையை திறக்குமாறு மிரட்டி அங்கிருந்து 10 பவுண் தங்க நகைகளை எடுத்துச் சென்றதுடன், காயங்களுக்கு உள்ளான நபரை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் உறவினர்களின் உதவியுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply