கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று(19) அதிகாலை இடம்பெற்ற விபத்திலேயே இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வீதியால் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் குறித்த இளைஞன் மீது மோதியதிலேயே இளைஞன் உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகன சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்த 22வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.