வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கண்ணீருக்கு பதில் தருவதாக கூறிய புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் இன்று(30) காலை 10 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த லிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,
எமது பிள்ளைகள் கையளித்தும், சரணடைந்தும் காணாமல் ஆக்கப்பட்டள்ளனர். கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளைத் தேடி நாங்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றோம். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க சர்வதேசம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் போராடுகின்றோம்.
இதற்கு முன் இருந்த அரசுகள் எம்மை ஏமாற்றின. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடுகிறோம்.
ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை கிடைக்கவில்லை. எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போரடிஇடம்பெற்ற தேர்தல்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு நீதி பெற்றுக் கொடுப்பேன் என புதிய ஜனாதிபதி கூறினார். ஆனால் 6 மாதங்களாகியும் இன்றுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை
ஏனைய ஜனாதிபதிகள் போன்று இவரும் ஏமாற்றுவதாகவே உணர்கின்றோம். இன்றுவரை பாதிக்கப்பட்ட எம்முடன் பேசக்கூவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலியும், கண்ணீரும் எனக்கும் தெரியும் என்றார். அதன் வலி எனக்கு புரியும் என்றார். ஆனால் இன்றுவரை எந்த முயற்சியும் அவர் எடுத்திருக்கவில்லை.
நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றபட்டே வருகின்றோம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.