ஊடகவியலாளர் ஆர்.எஸ்.ரஞ்சன் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் நேற்றையதினம் (19.11.2024) சம்பவித்துள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த இவர் பல்வேறு ஊடக நிறுவனங்களில் சுயாதீன ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ரஞ்சன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.