கிளிநொச்சி கூலாவடிப்பகுதியில் உழவு இயந்திரத்தில் வந்த போது மாட்டின் மீது மோதியதால் கண்ணால் கண்ட பெரியவர் கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டவேண்டாமென கேட்க தொடங்கியதன் விளைவு இராணுவத்தையும் புலனாய்வாளர்களையும் வைத்து அந்த ஊரின் 70 வயது முதுமைப்பெண் உட்ப்பட சிறுவர்கள் வரை உழவு இயந்திரக்கும்பல் தாக்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வீட்டுக்குள் மறைந்து நின்றவர்களை இராணுவம் எந்த அனுமதியுமின்றி வீட்டுக்குள் நுழைந்து சட்டையில் பிடித்து இழுத்துச்சென்று உழவு இயந்திரக்கும்பலிடம் ஒப்படைத்து அவர்கள் வாள்கள் கத்திகளோடு தாக்கும் போது பார்வையாளர்களாக இருந்துள்ளார்கள்.
அதேவேளை
அவர்களின் தாக்குதலால் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விசனம் அடைந்த அவ்வூர் மக்கள் சிறீலங்கா காவல்த்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை
சட்டவிரோத மணல் ஏற்றும் விவகாரமே வாள்வெட்டில் முடிந்ததாகவும் தெரியவந்துள்ளது