கிளிநொச்சி மக்களுக்கு வழங்கப்படாதுள்ள உறுதிகளை உடனடியாக வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்பி

You are currently viewing கிளிநொச்சி மக்களுக்கு வழங்கப்படாதுள்ள உறுதிகளை உடனடியாக வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்பி

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (26.12.2024) கிளிநொச்சி மாவட்டச் செயலத்தில் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் சமர்ப்பிக்கப்ப்டட பிரச்சினைகள் இங்கு இணைக்கபட்டுள்ளது

அரசாங்க அதிபர் – மாவட்டச் செயலகம்

செயலாளர் – மாவட்ட ஒருங்கிணைப்பு குழு

மாவட்டச் செயலகம்

கிளிநொச்சி

பின்வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக

காணி உறுதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

• கிளிநொச்சி மாவட்டத்தில் 1952 1953 1954 1958 ஆகிய காலப்பகுதியில் வட்டக்கச்சி உருத்திரபுரம், இராமநாதபுரம் முருசுமோட்டை, கனகபுரம், கணேசபுரம் உட்பட மேலும் பல இடங்களில் அரசாங்கத்தினால் குடியேற்றத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அச்சந்தற்பத்தில் பொது மக்களுக்கு காணிகள் வழங்கும்போது அக்காணிகள் குடியிருப்பவர்களுக்குச் சொந்தமானதாகவிருக்கும் என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டே மக்கள் அங்கு குடியேற்றப்பட்டிருந்தார்கள். எனினும் குடியேற்றங்கள் நடைபெற்றபோது யாருடைய பெயரில் உறுதிகள் மற்றும் அனுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதோ அவர்களது பெயரிலேயே சுமார் 99 வீதமான் உறுதிகளும் அனுமதிப்பத்திரங்களும் உள்ளன. குடியேற்றங்கள் நடைபெற்று சுமார்  72 வருடங்கள் கடந்த பின்னரும் அந்த மக்களுக்குரிய காணிகள் அவர்களுக்குச் சொந்தமானதாக மாற்றிக் கொடுக்கப்படவில்லை. அதனால் அக்காணிகளில் வசிப்பவர்கள் பல்வேறுபட்ட சமூகப் பிரச்சனைகளுக்கும் சட்டப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்துவருகின்றார்கள்.

கிளநொச்சி மாவட்டத்தில் மேற்படி குடியேற்றத் திட்டங்களில் குடியேறியவர்களில் காணி உறுதிகள் மாற்றிக் கொடுக்கப்படாதவர்களது எண்ணிக்கை பிரதேச ரீதியாக எத்தனை

கிளநொச்சி மாவட்டத்தில் அனுமதிப்பத்திரங்கள் மூலம் காணிகள் வழங்கப்பட்டு தற்போது வரை அக்காணிகளுக்கு உறுதிகள் வழங்கப்படாதுள்ள உரிமையாளர்களது எண்ணிக்கை பிரதேச ரீதியாக எத்தனை

ஆகிய தகவல்கள் எழுத்து மூலமாக வழங்குமாறும்

மேற்படி பிரச்சினைகளைத் தீர்க்குமுகமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அந் நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பில் எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கோருகின்றேன்.

• சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளிகள் அனைத்தும் கல்வித் திணைக்களத்தின் கீழ் கையளிக்க உடன் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

• பளையில் அமைந்துள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழு (LRC) காணிகளை அதே பகுதியிலுள்ள மக்கள் பெருந்தோட்டச் சபை ( (Janatha Estate DevelopMent Board) ) என்ற நிறுவனம் சட்டவிரோதமான முறையில் எந்தவொரு ஆவணமும் இல்லாமல் தனக்குச் சொந்தமான காணியென உரிமைகோரி வருவதுடன், LRC ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் சட்டபூர்வமாக பொது மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளையும் உள்ளடக்கியதாக பெருமளவு காணிகளை சட்டவிரோதமான முறiயில் புத்தளத்திலுள்ள சிலோ பிளான்டேசன் என்ற அமைப்புக்கு உபகுத்தகைக்கு வழங்கியுள்ளனர். இது தொடர்பில் விசாரணை நடாத்தப்படல் வேண்டும்.

• பரன்மன்கிராய் – கல்முனை வீதி 16.1 கிலோ மீற்றர் கடந்த 15 ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்படவில்லை. அதனால் மக்கள் நாளாந்தம் பெரும் அவலத்துடன் குன்றும் குழியுமாக உள்ள கிரவல் வீதி ஊடாக பயணம் செய்கின்றார்கள். இவ்வீதியைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு

• கனகாம்பிகைக் குளத்தின் ஒரு பகுதியினை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அதன் ஒரு பகுதியில் மண்கொட்டி நிரப்பப்பட்டமை தொடர்பாக கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதனை அகற்றுவதற்கான தீர்மானங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அது தொடர்பான முன்னேற்ற அறிக்கை எழுத்து மூலம் சமரப்பிக்க வேண்டும்.

• 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தினூடான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிதி திருப்பப்பட்டமை தொடர்பில் விசாரணை வேண்டும்.

கிளி/கோணாவில் மகா வித்தியாலத்தில் பாராளுமன்ற உறுப்பினராகிய எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் திறந்தவெளி அரங்கின் கூரைத் திருத்தத்திற்கென ரூபா.300,000.00 (முந்நூறாயிரம்) வும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கிளி/கோணாவில் மகா வித்தியாலத்திற்காக திறந்தவெளி அரங்கம் அமைப்பதற்கென ரூபா.1,800,000.00 (பதினெட்டு இலட்சம்) வும் ஒதுக்கப்பட்டது. குறித்த நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக கரைச்சி பிரதேச செயலகத்தின்    2024-07-30 திகதியிடப்பட்ட  KR/DS/PL/DCBP/2024     ஆம் இலக்க கடிதம் மூலம் குறித்த பாடசாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவ் வேலைக்கான  KR/DS/PL/DCB/CON/2024/08   ஆம் இலக்க வேலை ஒப்பந்தத்தில் 2024-10-04 ஆம் நாளன்று கரைச்சி பிரதேச செயலாளர் திரு.த.முகுந்தன் அவர்களும் கிளிஃகோணாவில் மகாவித்தியாலயத்தின் முதல்வர் திரு.சே.அம்பிகைபாகன் அவர்களும் கைச்சாத்திட்டிருந்தார்கள். அதன் பின்னர் பாடசாலை நிர்வாகத்தால் அரச நிதி ஒழுங்கு விதிகளுக்கேற்ப 2024-10-22 ஆம் நாளன்று கூலி ஒப்பந்தகாரர்களுக்கு அவ்வேலையை வழங்கியிருந்த நிலையில் சனாதிபதி அலுவலகத்தின்  PS/PIMD/07/11    ஆம் இலக்க 2024-10-28 ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் மேற்குறித்த வேலையினை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வேலை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேற்குறித்த வேலைத்திட்டம் தொடர்பான அறிவித்தல் 2024-07-30 ஆம் கிடைக்கப்பெற்ற நிலையில் இரண்டுமாத காலம்வரை வேலைக்கான திட்டமிடல்களையும் கட்டுமான அளவுத்திட்டங்களையும் (BOQ)    தயாரிப்பதற்கு இழுத்தடிக்கப்பட்டமைக்கான காரணங்களை தெளிவுபடுத்துவதுடன் குறித்த வேலைத்திட்;டத்திற்கான நிதி தடுக்கப்பட்டமைக்கான காரணம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். ஆத்துடன் நிறுத்தப்பட்ட  குறித்த வேலையை தொடர்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் முன்னேற்றம் தொடர்பில் எழுத்து மூலம் பதில் தரப்படல் வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலீசாரது  பிடியிலுள்ள தனியார் காணிகள் மற்றும் அரச காணிகள், பொது அமைப்புக்களுக்கான காணிகள் பற்றிய விபரங்கள் (அமைவிடம், விஸ்தீரணம் மற்றும் எவ்வளவு காலம்) மற்றும் அக்காணிகளுக்குச் சொந்தமான தனியாரதும் பொது அமைப்புக்களது விபரங்கள் என்பன எழுத்து மூலம் தரப்படல் வேண்டும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply