கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து,23.11.2023 அன்று கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி, கல்மடு பகுதியில் 150 மாவீரர்களின் பெற்றோர் பங்குபற்றலுடன் மக்களும் இணைந்து மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.இம்மதிப்பளிப்பில் முன்னைநாள் போராளிகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள் மக்களென பலர் பங்குபற்றியிருந்தனர்.
முதலில் மாவீரர் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ,மலர்வணக்கம் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
மாவீரர் ஈகங்கள் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்று,பெற்றோர் சந்திப்புக்களோடு நிறைவுபெற்றது.
மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு உலர்உணவுப்பொருட்கள் கனடா வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் வழங்கிவைக்கப்பட்டது.அனைவரது அகம்நிறைந்த வணக்கத்தோடும் உணர்வெழுச்சியோடும் மதிப்பளிப்பு நிறைவுபெற்றது



