கிளிநொச்சி மாவட்டத்தில் பல வர்த்தக நிலையங்களில் மாவட்ட அளவீட்டு அலகுகள் திணைக்களத்தினால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி , கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம், அக்கராயன், வட்டக்கச்சி, பரந்தன் மற்றும் கிளிநொச்சி நகரப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள், அரிசி ஆலைகள், எரிபொருள் நிரப்புநிலையம், மீன்சந்தை, பழக்கடைகள் மற்றும் தேங்காய் மொத்த விற்பனை நிலையம், கோப்சிற்றி, நகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கையின் ஊடாக உரிய காலத்தில் முத்திரையிடப்படாத,மற்றும் அரச அனுமதியற்ற தராசுகள் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டன.