கிழக்கில் நேற்று மேலும் 180 பேருக்கு கொரோனா!

You are currently viewing கிழக்கில் நேற்று மேலும் 180 பேருக்கு கொரோனா!

கிழக்கு மாகாணத்தில் நேற்று மொத்தம் 180 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட்19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் – 89, மட்டங்களப்பில் 84 மற்றும் திருகோணமலையில் நேற்று 07 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தொற்று நோய் நாளாந்த நிலவர உத்தியோகபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த மேலும் 16 பேரின் உடலங்கள் ஓட்டமாவடியில் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கொவிட்-19 காரணமாக உயிரிழப்போரின் சடலங்கள் ஓட்டமாவடியில் தொடர்ச்சியாக அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் (ஜூன்-29) மேலும் 16 பேரின் உடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை அங்கு அடக்கம் செய்யப்பட்ட உடலங்களின் எண்ணிக்கை 831 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட இடமொன்றில் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply