கீரிமலையில் பிதிர்கடன் செய்ய நிபந்தனைகள் அறிவிப்பு!
எதிர்வரும் திங்கட்கிழமை ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு பிதிர்க்கடன் நிறைவேற்றும் பொது மக்கள் தற்பொழுது நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலை காரணமாக கொவிட் 19 நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு ஏதுவாக தமது பிரதேசத்திற்கு அருகில் உள்ள தீர்த்தக்கரையில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்வதுடன் அவ்வாறு வசதியற்றவர்கள் மட்டும் கீரிமலை தீர்த்தக் கேணியில் நிறைவேற்றுவதற்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வருகை தர வேண்டும். என வலி வடக்கு பிரதேச சபை அறிவித்துள்ளது.சுகாதார விதிமுறை நிபந்தனைகளாக..
01) பிதிர்க்கடன்களை நிறைவேற்றுபவர் மட்டும் அனுமதிக்கப்படுவர் அத்துடன் ஏனையோரை அழைத்துவருவதை தவிர்க்கவும்.
02) கடமை நிறைவேற்றும் குருமார்கள் வலி வடக்கு பிரதேச சபையில் பதிவினை மேற்கொள்ள வேண்டும்.
03) சகல வியாபாரங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
04) கட்டாயமாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.
05) கீரிமலை தீர்த்தக் கேணிக்கு பிரவேசிப்பதற்கு முன்னர் உடல் வெப்ப நிலையினை பரிசோதிப்பதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பரிசோதனை செய்த பின்பே உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர்.
06) பிதிர்கடன் நிறைவேற்ற வருவோர் உள்நுழைவதற்கு முன் பதிவினை மேற்கொள்ள வேண்டும்.
07) பொதுமக்கள் கட்டாயமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
08) குறிப்பிட்ட நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவினரே உள்வாங்கப்படுவார்கள். என்றும் வலி வடக்கு பிரதேச சபை அறிவித்துள்ளது.