எனவே எளிய முறையில் நம்முடைய வீட்டிலேயே செயற்கை பாலை கண்டறிந்து, அதை பயன்படுத்துவதை தவிர்த்தால் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.செயற்கை பாலை கண்டறிவது எப்படி?கசப்பு சுவை கொண்ட செயற்கை பாலை விரல்களுக்கு நடுவில் வைத்து தேய்த்தால், சோப்பு நுரையின் வாசனை வரும், சூடுபடுத்தினால் மஞ்சள் நிறத்திற்கு மாறும்.மேலும் பாலில் சில துளிகள் அயோடின் சேர்த்தால் நீல நிறத்திற்கு மாறும்.ஒரு சோதனைக் குழாயில் 5-10 மி.கி பாலை எடுத்து வேகமாக குலுக்கினால், அதிகளவு நுரை வந்தால் சோப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக அர்த்தம்.செயற்கை பாலை தொடர்ந்து குடித்து வந்தால்…பாலில் கால்சியம் நிறைந்துள்ளது, பற்களின் வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் கால்சியம் இன்றியமையாத ஒன்று.ஆனால் செயற்கை பாலை தொடர்ந்து குடித்து வந்தால் எலும்புகளை பலவீனப்படுத்துவதுடன், குடலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.மிக முக்கியமாக புற்றுநோய் வருவதற்கு காரணமாக அமையலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். |