பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 வயது நிரம்பிய லண்டனைச் சேர்ந்த சிறுவன் இஸ்மாயில் முகமது அப்துல்வாஹூப் ஆவான். அவனது குடும்பத்தினர் யாரும் இல்லாமலே உடல் அடக்கம் செய்யப்பட்டதாகும்.
மேலும் The mirror பத்திரிகையில் லண்டனில் வைரசினால் கொல்லப்பட்ட மிக வயது குறைந்த சிறுவன் இவன் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவனது உடல் தகனத்தின் போது தயார் மற்றும் உடன் பிறப்புக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. காரணம் உடன்பிறப்புகளும் வைரசின் தாக்கத்துக்கு உள்ளாகி தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இந்த சோகமான இறுதிச் சடங்கு பற்றி பிரிட்டிஸ் ஊடகங்கள் யாவும் செய்திகள் வெளியிட்டுள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.