அமைச்சர் சந்திரசேகரின் ஆதரவாளர்களால் முல்லைத்தீவு கடற்தொழில் சங்க தலைவர் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரிடம் வினாவியபோது அவற்றை விடுத்து NPP அமைச்சர்கள் கலந்துகொண்டதை கேளுங்கள், இப்போது கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்தார்.
ஏழை கடற்தொழிலாளி மீது கொலைவெறித் தாக்குதலை அவரது குண்டர்கள் மேற்கொண்டார்கள். அதுதொடர்பான ஊடகவியலாளர்களது கேள்விக்கு ஏழைகளது பங்காளியென கூவிக்கூவி அரசியல் செய்யும் அனுர அரசின் கடற்தொழில் அமைச்சர் றவுடித்தனமாக பதிலிப்பது எதிர்காலத்தில் மக்களின் வாழ்வியலில் எப்படியான தாக்கத்தை உருவாக்கும் என்பதை புரிந்து தமிழ் மக்கள் சரியான வழியில் செல்லும் தமிழ்த்தேசிய அரசியலை பலப்படுத்தவேண்டும் என்பதே காலத்தின் தேவை