தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரண்டே வருடங்களில் செய்துவிட்டதாக தெரிவிக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன், காணி உரிமை என்பது மலையக மக்களுக்கு எட்டாக்கனி எனவும் தெரிவித்தார்.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சிங்களவர்கள், வட,கிழக்கு தமிழர்கள், முஸ்லிம் உள்ளிட்ட மக்களுக்கு இந்நாட்டில் காணிகள் உள்ளன. ஆனால் மலையக மக்களுக்கு காணிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்றார்.
குருட்டுத்தனமாக குரைக்கும் இராதகிருஸ்ணன் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் சிறீலங்கா என்ற முழுநாட்டையும் அழிப்பதற்காக தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் போராடவில்லை தமிழர்களுக்காக தமிழரின் உரிமைக்கா போராடியவர் சிறீலங்காவை அழிப்பதற்கு போராடியிருந்தால் 30 வருடங்கள் தேவையில்லை 3 நாட்கள் போதுமானது.
சலுகைகளுக்காக அரசியல் நடத்தும் உங்களைப்போன்ற அடிவருடி அரசியல் வாதிகள் சிங்கள இனவாதிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஊதும் மகுடியை நிறுத்தவேண்டும்.