சுவீடன் தலைநகரில் உள்ள துருக்கிய தூதரகம் முன்பாக வைத்து, இஸ்லாத்தின் வேத நூலூன குர் – ஆன் எரிக்கப்பட்டதால், சுவீடன் – துருக்கி இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது!
நேட்டோ கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறத்துடிக்கும் சுவீடன், சுவீடனில் அடைக்கலம் பெற்றுள்ள குர்திய விடுதலை அமைப்பு உறுப்பினர்களை தன்னிடம் ஒப்படைத்தால் மட்டுமே சுவீடனின் நேட்டோ அங்கத்துவத்தை தன்னால் அங்கீகரிக்க முடியுமென துருக்கி உறுதிப்பாட்டோடு நிற்பதால், நேட்டோவில் அங்கத்துவம் பெறும் சுவீடனின் கனவு தள்ளிப்பொய்க்கொண்டிருப்பது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், சுவீடன் தலைநகரிலுள்ள துருக்கிய தூதரகத்தின் முன்னால் வைத்து குர் – ஆன் எரிக்கப்பட்டுள்ளமை, இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் சிக்கலாகியுள்ளன. குர் – ஆன் எரிப்புக்கு அனுமதி வழங்கக்கூடாதென துருக்கிய அரசு சுவீடன் அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தும், சுவீடன் காவல்த்துறை குர் – ஆன் எரிப்புக்கு அனுமதி வழங்கியமையால் கோபமடைந்துள்ள துருக்கிய அரசு, துருக்கியில் நடைபெறவிருந்த சுவீடனின் பாதுகாப்பு அமைச்சருடனான உச்சி மாநாட்டை இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுவீடனின் நேட்டோ கனவு இன்னமும் தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.