குறுகியகால சிறைத்தண்டனை பெற்றவர்களை விடுவிக்க ஆலோசனை! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing குறுகியகால சிறைத்தண்டனை பெற்றவர்களை விடுவிக்க ஆலோசனை! “கொரோனா” அதிர்வுகள்!!

நோர்வேயில், சிறிய குற்றங்களுக்காக, குறுகிய கால சிறைத்தண்டனை பெற்று, சிறைகளிலிருப்பவர்களை விடுதலைசெய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பான சுற்றறிக்கை நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களும், சிறைச்சாலைகளில் பணிபுரிவோரும் “கொரோனா” பாதிப்புக்கு ஆளாகும் ஆபத்தை குறைக்கும் நோக்குடனேயே மேற்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

90 நாட்களுக்கு உட்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தண்டனை முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவும், 90 நாட்களுக்குக்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 20 நாட்களுக்கு முன்னதாகவும், 6 மாதங்களுக்கு அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்கு முன்னதாகவும் விடுவிக்கப்படலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகக்குறைந்ததது 60 நாட்கள் சிறைத்தண்டனையை ஏற்க்கெனவே அனுபவித்துவிட்டவர்களுக்கே இந்நடைமுறை பொருந்துமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், 74 நாட்களுக்கு குறைவான தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இது பொருந்தாது எனவும், விடுவிக்கப்படுபவர்கள் மீதான சட்டரீதியான கண்காணிப்புக்கள் நடைமுறையிலிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள