குற்றவாளியாகவே ஜனாதிபதி பதவியேற்கவுள்ள ட்ரம்ப்!

You are currently viewing குற்றவாளியாகவே ஜனாதிபதி பதவியேற்கவுள்ள ட்ரம்ப்!

வரலாற்றில் முதல்முறையாக, குற்றவாளியாகவே அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், நியூயார்க்கில் உள்ள ஹஷ் மணி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு, சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது சமுதாய சேவைச் செயல்பாடுகளோ வழங்கப்படவில்லை.

நியூயார்க் நீதிபதி ஜுவான் மெர்ச்சான், ட்ரம்பின் 34 குற்றச் செயல்களுக்கு “முழுமையான விடுதலை” வழங்கினார். இதனால் அவருக்கு சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ இல்லாமல் விடுதலை அளிக்கப்பட்டது.

இருப்பினும், குற்றம் நீக்கப்படாத வரை, டிரம்ப் தனது குற்றவாளி பதிவுடன் பதவியேற்கும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக வரலாற்றில் அடையாளம் காணப்படுவார்.

குற்றவாளியாக இருப்பினும் ட்ரம்ப் வாக்களிக்கத் தகுதியுடையவராக உள்ளார். ஏனெனில் அவருடைய வாக்காளர் பதிவு உள்ள புளோரிடா மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு தகுதிகள் திரும்ப வழங்கப்படுகிறது.

அமெரிக்க சம்மேதையாக குற்றவாளிகள் துப்பாக்கி வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் குற்றவாளிகளின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிப்பது சட்டபூர்வமானது. ட்ரம்ப் இதற்கு உட்பட வேண்டும்.

மத்திய அரசின் சட்டங்கள், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை ஜனாதிபதியாக அமர்த்துவதற்கு தடையாக இருக்கவில்லை.

ட்ரம்ப் உலகப் பயணங்கள் மற்றும் தொழில்முனைப்பு முயற்சிகளில் நுழைவதில் சில தடைகளை சந்திக்கலாம்.

நியூயார்க் ஆளுநர் மட்டுமே ட்ரம்புக்கு மன்னிப்பு வழங்க முடியும். தற்போதைய ஆளுநர் கெத்தி ஹோகுல், ட்ரம்ப் மன்னிப்பு பெறுவது பற்றிய நேரடி முடிவைத் தெரிவிக்கவில்லை.

ட்ரம்ப் வழக்கை மோசடி என்று குறிப்பிட்டுள்ளார், ஆனால் இந்த வழக்கு அவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply