குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி சடலமாக மீட்பு!

You are currently viewing குளத்தில் நீராடச் சென்ற சிறுவன்  நீரில் மூழ்கி சடலமாக மீட்பு!

கிளிநொச்சி  கரியாலை நாகபடுவான் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பூநகரி ஜெயபுரம் சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் குளத்தில் நேற்று(03) பிற்பகல் நான்கு சிறுவர்கள் குளத்தில் நீராடச் சென்றுள்ளனர்.

இதில் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் கிராமவாசிகள் ஒன்றிணைந்து குறித்த சிறுவனை தேடி நீண்ட நேரங்களின் பின் சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டுள்ள சிறுவனின் சடலம் உடல் கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஜெபுரம் மற்றும் முழங்காவில் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜெயபுரம் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் மலர்வண்ணன் விதுஷன என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply