வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சை பலனின்றி 3வயது சிறுமி மரணமடைந்துள்ளார்.
நொச்சிமோட்டையில் உள்ள அவர்களது விவசாய காணியில் (08.09.2020) மதியம் 12.30 மணியளவில் குளவி கொட்டுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.