மன்னாரில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்குஇ மடு பகுதியை சேர்ந்த 27 வயதான யுவதியொருவர் கடந்த 12 திகதியன்று வீட்டில் குளிர்காய்வதற்காக அடுப்பினை பற்றவைத்துள்ளார்.
இதன்போது அவரது ஆடையில் திடீரென தீப்பற்றி தீவிபத்துக்கு உள்ளாகினார்.
இந்நிலையில் அன்றையதினமே பண்டிவிரிச்சான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதன்பின்னர் 13ஆம் திகதி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த யுவதியின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.