இலங்கையை மட்டுமன்றி முழு உலகையே நடுநடுங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தாயொருவர் தனது மகனை நினைத்து கண்ணீர் வடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது ஐந்து வயது மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, மரண விளிம்பில் இருப்பதால் தான் மிகுந்த வேதனையுடன் இருப்பதாகவும், இதனால் ஒவ்வொரு தாய்மாரும் தனது குழந்தைகள் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த தாய் மேலும் குறிப்பிடுகையில், 30 வயதான தனக்கு, ஐந்து வயதுடைய மகனொருவர் இருப்பதாகவும், குறித்த குழந்தை மிகுந்த ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவன் சுறுசுறுப்புடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரோக்கியமாயிருந்த மகனிற்கு திடீரென காய்ச்சல் அதிகரித்ததாகவும், உடலின் வெப்பநிலை 42C ஆக மாறியதால் வாந்தி வெளியேறியதாகவும், இதனால் வைத்தியசாலையில் அனுமதித்தாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வைத்தியசாலையில் அனுமதித்தப்போது, மகனின் இரத்தத்தில் சக்கரையின் அளவு 3.7, இதயத்துடிப்பு 180 ஆக இருந்ததாகவும் குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் தயார் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இன்னும் தனது ஐந்து வயது மகனிற்கு நடுக்கமும் வியர்வை உடலில் கொட்டுவதும் குறையாமல் அவஸ்தைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
மேலும் தற்போது வைத்தியசாலையிலுள்ள குழந்தை உணவோ, நீரோ எதுவும் அருந்தாமல், படுத்த படுக்கையாக இருப்பதை தன்னால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியவில்லையென்றும், இது தனக்கு மரண வேதனையாகவுள்ளதாகவும் அந்தத்தாய் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தனது மகன் அம்மா நான் செத்துடுவேனா? என்று கேட்டது, இன்னும் தனது காதில் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பதிவை தான், அனுதாபம் சேர்ப்பதற்காக பதிவிடவில்லையென கூறிய அத்தாய், கொரோனாவின் கொடூரத்தன்மைமையை இலகுவாக மதிப்பிட்டு விலைமதிப்பற்ற உயிரை யாரேனும் இழந்துவிடக்கூடாதென்பதற்காகவே பதிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவினால், ஒவ்வொருவரும் தம்மையும் காத்து, உறவினர்களின் சுகாதாரத்திலும் அக்கறை செலுத்துமாறும் தெரிவித்துள்ளார்.