அமெரிக்காவில் குழந்தைகள் மத்தியில் தோன்றியுள்ள புதுவிதமான நோய்ப்பரவல் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிக அரிதாகத் தோன்றும் நோயான கவாசாகி நோயால் (Kawasaki disease – KD) அமெரிக்காவில் ஆண்டுக்கு 3,000 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
கொரோனாவால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில், கவாசாகி (KD) நோயைப் போன்ற அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மிக அரிதாகத் தோன்றும் நோயான கவாசாகியால் அமெரிக்காவில் ஆண்டுக்கு 3,000 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது அதே போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 குழந்தைகள் உயிழந்துள்ளனர். கடந்த வியாழன்று 5 வயதான ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று மேலும் இருவர் உயிரிழந்ததாக நியூயார்க் மாகாண ஆளுநர் Andrew Cuomo கூறியுள்ளார்.
உயிரிழந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸ் தான் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று உறுதியாக கூற முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.