குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டி நகை , மோட்டார் சைக்கிள் கொள்ளை!

You are currently viewing குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டி நகை , மோட்டார் சைக்கிள் கொள்ளை!

வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தயாரை மிரட்டி நகைகள் பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இன்று புதன்கிழமை (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்மணி கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஆவார். அவர் இன்றையதினம் அதிகாலை  தனது தொழில் நிமித்தம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் தனது குழந்தையுடன் சென்றார்.

இவ்வாறு சென்று கொண்டிருந்தவேளை வீதியில் மறைந்து நின்ற முகமூடியணித்த மூவர் குறித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து குழந்தையின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபரித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக வவுனியா சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா சிறீலங்கா காவற்துறை நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு 9ஆம் வட்டாரம், மல்லிகைதீவு பகுதியில் ஆட்டு மந்தையில் இருவர் காவல் கடமையில் இருந்த போது திடீரென வந்திறங்கிய குழுவினர்  ஆடுகளை களவாடி செல்ல காவல் கடமையில் இருந்த இருவரையும் தாக்கிவிட்டு 9 இலட்சத்தி முப்பத்தைந்தாயிரம் பெறுமதியான  35 ஆடுகளை கொண்டு சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான இருவரில் ஒருவர் 55 வயதுடைய நபர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவற்துறையினருக்கு  தெரியபடுத்தியதனையடுத்து  சந்தேகத்தின் பேரில் வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் 15 ஆடுகள் மீட்கப்பட்டு, ஆடுகளை கடத்தி செல்ல பயன்படுத்திய வொலிரோ கப் ரக வாகனமும்  சிறீலங்கா காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சிறீலங்கா காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply