கூட்டாக சிக்கிய போதைக்கடத்தல்க்காரர்!!

You are currently viewing கூட்டாக சிக்கிய போதைக்கடத்தல்க்காரர்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கடத்தி செல்லப்பட்ட பெருமளவு போதைப்பொருள் நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில், குறித்த போதைப் பொருள் கடத்தலுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் சிக்கியிருக்கின்றார்.

நீர்கொழும்பில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரே இந்த கடத்தல் வலையமைப்பின் பிரதான சூத்திரதாரி என கூறப்படுகின்றது. அண்மையில் சுமார் 42 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்களுடன்,  1 கோடி ரூபாய் பெறுமதியான வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், அன்ஷர் ரிஸ்வான்(வயது41) என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

இந்நிலையில் குறித்த போதைப்பொருள் யாழ்ப்பாணம் தொண்டமனாறு கெருடாவில் பகுதியை சேர்ந்த சிவாசுப்பிரமணியம் திலீபன்(வயது34) என்பவர் போதைப் பொருளை வாகனத்தில் நீர்கொழும்புக்கு அனுப்பியமை விசாரணைகளில் அம்பலமாகியிருக்கின்றது.

 அந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக ஜா எல பகுதியை சேர்ந்த ரஞ்சித் திசநாயக்க (56), ஹந்தல, மாவகொடவை சேர்ந்த சீதாராம் ரவீந்திரன் அல்லது குமார் (41), நாத்தாண்டியாவை சேர்ந்த முகமது அசாம் அகில் முகமது (24), லுனுவிலவை சேர்ந்த நிரங்க புத்திக கல்ஹார ஜெயகோடி (37)  ஆகியோர் இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புபட்ட நிலையில் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்பிற்கு நீண்டகாலமாக போதைப்பொருளை கடத்தி வந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள