கெஞ்சமாட்டோம் – ஹிஸ்புல்லா புதிய தலைவர் காசெம்.

You are currently viewing கெஞ்சமாட்டோம் – ஹிஸ்புல்லா புதிய தலைவர் காசெம்.

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் நைம் காசெம் இன்று புதன்கிழமை தனது முதல் தொலைக்காட்சி உரையை நிகழ்த்தினார். இஸ்ரேலுக்கு எதிரான போரைத் தொடர்வதாக உறுதியளித்தார்.

காசாவில் ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் ஹிஸ்புல்லாவின் முடிவிற்குப் பின்னால் புதிய தலைவர் காசெம் நின்றார். பிராந்தியத்தில் இஸ்ரேலிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள காசாவிற்கு ஆதரவு அவசியம் என்று கூறினார்.

இதற்கிடையில், இஸ்ரேல் லெபனானில் உள்ள இலக்குகளைத் தொடர்ந்து குண்டுவீசித் தாக்கியது. ரோமானிய யுனெஸ்கோ பாரம்பரிய தளம் அமைந்துள்ள கிழக்கு நகரமான பால்பெக்கைத் தாக்கியது.

இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பால்பெக்கின் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் நகரத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

சில நிபந்தனைகளின் கீழ் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஹிஸ்புல்லா அமைப்பு கதவுகளைத் திறந்திருப்பதாக ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் நைம் காசெம்  தெரிவித்தார்.

கடந்த மாதம் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட நீண்டகாலத் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்குப் பின்னர் ஹிஸ்புல்லாவின் முடிவெடுக்கும் ஷூரா கவுன்சிலால் காசெம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 71 வயதான அவர் தனதுஹசன் நஸ்ரல்லாவின் திட்டங்களை பின்பற்றுவதாக கூறினார். மேலும் ஹிஸ்புல்லா லெபனானுக்குள் இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை வரவிருக்கும் மாதங்களுக்கு தொடர்ந்து எதிர்க்க முடியும் என்று கூறினார்.

ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலியர்கள் முடிவு செய்தால், நிபந்தனைகள் ஏற்கத்தக்கவை என்று நாங்கள் கண்டால் நாங்கள் போரை முடிவுக்கு கொண்டுவரமுடிவும் என்று புதிய தலைவர் தனது முதல் தொலைக்காட்சி உரையில் கூறினார்.

அதேநேரம் அவர் தனது அமைப்பு போர்நிறுத்தத்திற்காக கெஞ்சாது என்று தெளிவுபடுத்தினார் மேலும் ஹிஸ்புல்லா இஸ்ரேலிடம் இருந்து இன்னும் நம்பகமான முன்மொழிவைப் பெறவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply