அவுஸ்திரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்கு உள்ளான குவாடன் பெல்ஸின் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வளைத்தளங்களில் பரவலானதை அடுத்து உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதராவாக குரல் எழுப்பட்டது.
வளர்ச்சியின்மை காரணமாக அவர் பாடசாலையில் எதிர்கொண்ட துன்பங்களை தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து. நான் தற்கொலை செய்துக்கொள்ளபோகிறேன் என மனதை உருக்கும் வகையில் தன் தாயிடம் தெரிவித்ததை அவரது தாய் காணொளி எடுத்து சமூகவளைத்தளங்களில் வெளியிட்டார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் ஆல்-ஸ்டார் ரக்பி அணியில் துன்பத்துக்குள்ளான சிறுவனை வரவேற்க்கும் முகமாக அவரை மைதானத்திற்கு அழைத்து வந்து அணியை வழிநடத்தும் காட்சிகள் சமூகவளைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றது.
![கேலி, கிண்டலுக்கு உள்ளான சிறுவன்: ரக்பி அணியினருடன் கம்பீரமாக வரவேற்பு! 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/02/ragbi_1.png)
![கேலி, கிண்டலுக்கு உள்ளான சிறுவன்: ரக்பி அணியினருடன் கம்பீரமாக வரவேற்பு! 2](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/02/ragbi_2.png)