யாழ்ப்பாணம் – வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வன்முறைக் கும்பல், ஒருவரை வாளால் வெட்டி, துண்டிக்கப்பட்ட கையை எடுத்துச் சென்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைவாள்களுடன் சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டியதுடன் வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் சிறீலங்கா பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கையை இழந்தவர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார்