வடகொரியா அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கிம் இன் கொடூர ஆட்சியில் அவ்வப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென்கொரியா வெளியிட்டுள்ளது.
அதில், சிறுவர்களுக்கு மரண தண்டனை, ஆறு மாத கர்ப்பிணிக்கு மரண தண்டனை, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை போன்ற மிக கொடூரமான மனித உரிமை மீறலில் வடகொரியா விதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதே போல், உயரம் குறைவான வடகொரியாவில் பெண்களுக்கு கருப்பைகள் அகற்றப்பட்டதாகவும் பரபரபப்பு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.