கொடிகாமம் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பட்டா வாகனம் விபத்துக்குள்ளாகியதில் வாகனத்தில் பயணித்த மூவரில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தானியங்கி சமிக்ஞை மூலம் இயங்கும் தண்டவாள பகுதியினை கடக்க முற்பட்ட வேளையிலே இவ் விபத்து இடம்பெற்றது.
இந்நிலையில் புகையிரத கடவைக்கு ஒரு காவலாளியை நியமிக்க வேண்டும் என பிரதேச மக்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது தண்டவாளத்தின் மேலே மரக்குற்றிகளை போட்டும் ரயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடிகாமம் காவல்துறையினர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் புகையிரத கடவைக்கு காவலாளியை நியமிக்கும் வரை காவல்துறையினர் கடமையில் ஈடுபடுவார்கள் என எழுத்து மூலம் சாவகச்சேரி, கொடிகாமம், கோப்பாய் உதவி காவல்துறை அத்தியட்சகர் கீர்த்திசிங்க மக்களிடம் கையளித்த பிற்பாடு போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.
கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளுமே விபத்தில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.