சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது பெருமூளையில் மிகப்பெரிய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ‘பெருமூளை அனுரிசம்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 2021-ஆம் ஆண்டு இறுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அனுரிசம் (Aneurysm) என்பது இரத்த நாளத்தின் சுவரில் ஏற்படும் அசாதாரண வீக்கம் அல்லது பலூன் போன்ற கட்டி என்று கூறப்படுகிறது. பெருநாடி, மூளை, முழங்காலின் பின்புறம், குடல் அல்லது மண்ணீரல் ஆகியவற்றில் அனியூரிசிம்கள் அடிக்கடி ஏற்படும்.
ஒரு சிதைந்த அனுரிசம் உட்புற இரத்தப்போக்கு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். இது சில சமயங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தலாம். அனியூரிசிம்கள் வெடிக்கும் வரை பெரும்பாலும் அறிகுறிகள் இருக்காது.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு Cerebral Aneurysm பிரச்சினை இருப்பதாகவும், அவர் அந்த நோயை சரி செய்ய அறுவைசிகிச்சைக்கு செல்வதை விட பாரம்பரிய சீன மருந்துகளுடன் சிகிச்சையளிப்பதை அவர் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரம்பரிய சீன மருந்துகள் இரத்த நாளங்களை மென்மையாக்குகிறது மற்றும் அனீரிஸத்தை சுருக்குவதாக அவர் நம்புகிறார்.
கோவிட்-19 தொடங்கியதில் இருந்து குளிர்கால ஒலிம்பிக் வரை அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டதால், அவரது உடல்நிலை குறித்து இந்த தகவல்கள் தாமதமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக மார்ச் 2019-ல், அவர் இத்தாலிக்கு சென்றபோது அவரது நடை அசாதாரணமாக தளர்வுடன் காணப்பட்டது, பின்னர் அதே சுற்றுப்பயணத்தின் போது, பிரான்சிலும் அவர் உட்கார முயற்சிக்கும் போது உதவியைப் பெற்றார்.
இதேபோல், அக்டோபர் 2020-ல் ஷென்சென் நகரில் பொதுமக்களிடம் உரையாற்றிய போது, அவரது தோற்றத்தில் தாமதம், மெதுவாகப் பேசுதல் மற்றும் இருமல் ஆகியவை மீண்டும் அவரது உடல்நலக்குறைவு குறித்த ஊகங்களுக்கு வழிவகுத்தன.