கொடுங்கோலன் கோட்ட அரசின் உத்தரவில் பல்கலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து அழிப்பு!

You are currently viewing கொடுங்கோலன் கோட்ட அரசின் உத்தரவில் பல்கலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து அழிப்பு!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர் சுகாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை ஏற்றவிடாது தடுத்து வருகின்றார்கள்.
இன்னிலையில் பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி பொலீசார் போடப்பட்டுள்ளதுடன் வளகாத்தின் வாயிற் கதவுகள் பூட்டப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகிகளால்இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது…………………..

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அரசாங்கத்தின் உத்தரவையடுத்து இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

2009ம் ஆண்டு இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி  மக்களுக்காக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் 

முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 

2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு 

நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய ராஜபக்ச அரசு இடித்தழித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள