கொடூரத்தின் உச்சம்: காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்!

You are currently viewing கொடூரத்தின் உச்சம்: காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்!

மொத்தமாக 500 பேர்களை பலிகொண்ட காஸா மருத்துவமனை தாக்குதலை முன்னெடுக்கவில்லை என இஸ்ரேல் தரப்பு மறுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலில், இஸ்லாமிய ஜிஹாத் ஏவிய ராக்கெட் ஒன்று குறி தவறி காஸாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது விழுந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. அந்த மருத்துவமனை வளாகமானது போருக்கு பயந்து நூற்றுக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இதை முற்றாக மறுத்துள்ளதுடன், இந்த கொடூர படுகொலையை நிகழ்த்திவிட்டு இஸ்ரேல் தப்பிக்க தங்கள் மீது பழி போடுவதாக குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் இஸ்ரேல் தங்களின் தொழில்நுட்ப தரவுகளை வெளியிட்டு, இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கில்லை என்றே உறுதிபட கூறி வருகிறது.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமரின் மூத்த ஆலோசகர் மார்க் ரெகேவ் தெரிவிக்கையில், இஸ்லாமிய ஜிஹாத் குழுவினர் ஏவிய ராக்கெட் இலக்கு தவறி மருத்துவமனை மீது தாக்கியுள்ளது எங்களிடம் போதுமான ஆதாரம் உல்லது என்றார்.

இந்த நிலையில் ஹமாஸ் முன்னெடுத்து வரும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், போரினால் இடம்பெயர்ந்த சுமார் 200 முதல் 300 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேலும் இடிபாடுகளுக்கு உள்ளே நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் தங்கியுள்ளனர், மேலும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்தவர்களும் அந்த மருத்துவமனையில் தஞ்சம்டைந்திருந்தனர்.

மருத்துவமனை தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் உடனடியாக கருத்து தெரிவிக்க மறுத்திருந்தது. அதன் பின்னரே, தங்களுக்கு பங்கில்லை என அறிக்கை வெளியிட்டது.

அக்டோபர் 7 தொடக்கம் இதுவரை காஸா பகுதியில் 3,000 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் பலி எண்ணிக்கை 1,400 என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆயுதக் குவியலுடன் புதன்கிழமை இஸ்ரேல் பயணிக்க உள்ளார். இதன் பின்னர் போரின் உக்கிரம் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply