தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு
இன்று தமிழர்தாயகத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.
முல்லைத்தீவு ;-
முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள். அந்தவகையில் முள்ளிவாய்க்கால் துயிலுமில்ல வளாகத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடர் மாவீரரின் தாயாரான வள்ளிபுரம் புஷ்பமலரினால் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.
தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்ததுடன் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு நினைவேந்தினார்கள்.



யாழ்ப்பாணம் ;-
மாவீரர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை இடம் பெற்றது.பொதுச்சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தை கந்தசாமி ஏற்றி வைத்தார்.அதனைத் தொடர்ந்து ஏனைய தீபங்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தி மலர் தூவி நினைவேந்தினார்கள்.




வவுனியா;-
வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.இதன்போது பிரதான ஈகைச்சுடர் இரண்டு மாவீரர்களின் தாயாரான பாக்கியத்தினால் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன.ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு நினைவேந்தப்பட்டது . கடும் மழைக்கு மத்தியிலும் ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு நினைவேந்தல் செலுத்தினர் .



வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் மாவீரர் தின நினைவேந்தல் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாவீரர்களின் தாயார் இருவரினால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் மாவீரர்களின் நினைவுருவ படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு;-
தமிழர்கள் இந்த நாட்டில் சுயநிர்ணய உரிமையுடன் ஏனைய இனங்கள்போன்று சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக தன்னுயிர்களை தியாகம் செய்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.பெருமளவான மாவீரர்களின் உறவினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. மாவீரர் நினைவு நாள் இன்றையதினம் தமிழர் தயாகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மிகவும் உணர்வு பூர்வமான முறையில் நடைபெற்றன.தற்போது நிலவி வருகின்ற வெள்ள அனர்த்த நிலமைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள், உள்ளிட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி நினைவேந்தினார்கள் .
மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் 2ஆம் லெப்பினட் தங்கநிலா என்பவரின் தாயார் கிருஷ்ணபிள்ளை புண்ணியவதி பொதுச்சுடர் ஏற்றினார். தொடர்ந்து இரண்டாயித்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவீர்ரகளின் பெற்றோர் கலந்துகொண்டு தீபங்களை ஏற்றி நினைவேந்தினார்கள்.



எள்ளங்குளம்
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2024 உலகெங்கும் நவ .27 நடைபெறுகின்றது இந்நிலையில் அனைத்து ஒழுங்குகள் நிறைவடைந்து எமது புனிதர்களை தரிசிக்க வட தமிழீழம் , எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் தயாராக உள்ளது.






கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று புதன் (27) உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது







அம்பாறை – திருக்கோவில், கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அருகே மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டுள்ளது.
ஈச்சங்குள துயிலுமில்லத்தில்
ஆலங்குளம் துயிலுமில்லத்தி…
சாட்டி துயிலும் இல்லத்தில் ….
மன்னார் ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல திடல்…
தேராவில் துயிலும் இல்லம்
அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில்….
வடமராட்ச்சிக்கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில்—-
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்த நிகழ்வானது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.
மேஜர் விநோதரன் (பாலசுந்தரம் அஜந்தன்) னின் தாயார் பாலசுந்தரம் பொதுச்சுடரை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் ஈகைச் சுடர்களை ஏற்றி, மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாவீரர்களின் உறவுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தலில் ஈடுபட்டனர்.

