யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச கல்வியை ராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக நீக்ககோரி யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கொத்தலாவல சட்ட மூலத்தின் மூலம் நாட்டில் உள்ள இலவச கல்வியை ராணுவ மயமாக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுபூராகவும் பொது அமைப்புக்கள் ,ஆசிரியர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.