வட கொரியாவின் திடீர் ஏவுகணை தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடனான உறவுகளை சீர்குலைக்கும் நோக்கில் வட கொரியா திங்கட்கிழமை இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளது. முதல் ஏவுகணை, ஒரு குறுகிய தூர ஏவுகணை, அதிகாலை வேளையில் ஏவப்பட்டது.
பத்து நிமிடங்கள் கழித்து, தென் கொரியாவின் ராணுவம் இரண்டாவது, அடையாளம் காணப்படாத ஏவுகணையைக் கண்டறிந்தது.
தென் கொரியா தனது கண்காணிப்பை வலுப்படுத்தி, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது.
வட கொரியாவின் அரசு ஊடகங்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
இது கடந்த வாரம் பல தலைகளை கொண்ட ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக பியோங்யாங் உரிமை கோரியிருந்த நிலையில் தற்போதைய ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது.
ஆனால் வட கொரியாவின் இந்த ஏவுகணை தாக்குதலை தென் கொரியா அப்போது மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவின் அதிகரித்த ஏவுகணை சோதனைகள் மற்றும் தென் கொரிய செயல்பாட்டாளர்களின் துண்டு பிரசுரங்களுக்கு எதிராக “குப்பை பலூன்கள்” மூலம் பழிவாங்குதல் ஆகியவை பதற்றத்தை அதிகரித்துள்ளன.