கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய பிரான்ஸ் – 91 பேர் பலி!

You are currently viewing கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய பிரான்ஸ் – 91 பேர் பலி!

இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து ஐரோப்பிய நாடான பிரான்சிலும் கொரோனா தாண்டவம் ஆடி வருகிறது.அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 145-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. 

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக இத்தாலியில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 1,440 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 ஆயிரத்து 660 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இத்தாலியை தொடர்ந்து மற்றுமொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினிலும் கொரோனா புரட்டி எடுத்துவருகிறது. 

அந்நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 6 ஆயிரத்து  250 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா தீவிரமடைந்துவருகிறது. 

அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துவரும் நிலையில் பிரான்சில் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அந்நாட்டு பிரதமர் எட்வட் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். அவசர தேவைகள் இல்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

பகிர்ந்துகொள்ள